தபால் வாக்குகள் வாக்கு எண்ணிக்கை மையத்திற்கு அனுப்பி வைப்பு

தபால் வாக்குகள் வாக்கு எண்ணிக்கை மையத்திற்கு அனுப்பி வைப்பு

மதுரை நாடாளுமன்ற தேர்தலில் பதிவான தபால் வாக்குகளை, வாக்கு எண்ணிக்கை மையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.

மதுரை நாடாளுமன்ற தேர்தலில் பதிவான தபால் வாக்குகளை, வாக்கு எண்ணிக்கை மையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.
மதுரை நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட 6 சட்டமன்றங்களிலும் பதிவான தபால் வாக்குகள் மதுரை மாவட்ட ஆட்சி அலுவலகத்தில் சீலிடப்பட்ட அறையில் வைக்கப்பட்டிருந்தது. தற்போது வாக்கு எண்ணிக்கை 8 மணிக்கு நடைபெற இருப்பதால் தபால் வாக்குகளை தேர்தல் நடத்தும் அலுவலர்கள் முன்னிலையில் காவல்துறையினர் பாதுகாப்பில் அறைகள் திறக்கப்பட்டு, தபால் வாக்கு பெட்டிகள் வாக்கு எண்ணும் மையத்திற்காக அனுப்பி வைப்பதற்காக அதிகாரிகள் வாகனங்களில் ஏற்றி வருகின்றனர். மொத்தம் 6590 வாக்குகள் பதிவாகிய தபால் வாக்குகளை 8 பெட்டிகளில் மாவட்ட ஆட்சியர் அலுவலக அறையில் இருந்து வாக்கு எண்ணும் மையமான மதுரை மருத்துவக் கல்லூரிக்கு அதிகாரிகள் வாகனங்களில் எடுத்து செல்கின்றனர்.

Tags

Next Story