மாநகராட்சி சார்பில் நிவாரண பொருட்கள் அனுப்பி வைப்பு
நிவாரண பொருட்கள் அனுப்பி வைப்பு
நெல்லை,தூத்துக்குடி,தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களில் பெய்த கன மழை காரணமாக பல இடங்களில் வெள்ள நீர் சூழ்ந்து பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கபட்டது. பல்வேறு பகுதிகளில் பொதுமக்கள் தங்கள் உடமைகளை இழந்து இன்னலுக்கு ஆளாகியுள்ள சூழலில் மாநிலம் முழுவதிலும் இருந்து நிவாரண பொருட்கள் அனுப்பிவைக்கப்பட்டு வருகின்றன.இந்த நிலையில் கோவை மாநகராட்சி சார்பில் வெள்ள நிவாரண பொருட்கள் லாரிகள் மூலம் அனுப்பி வைக்கப்பட்டன. மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன் ஏற்பாட்டின் பேரில் 30 முட்டை அரிசி,ரொட்டி, பிஸ்கட், தண்ணீர் பாட்டில் கடலை மிட்டாய் சிப்ஸ் ஆகியவை உள்ளடக்கிய 15 ஆயிரம் பேருக்கான நிவாரண பொருட்கள் தலையணைகள் மற்றும் 16000 குடிநீர் பாட்டில்கள் ஆகியவையும் அனுப்பி வைக்கப்பட்டது.
Next Story