சென்னைக்கு நிவாரண பொருட்கள் அனுப்பி வைப்பு

சென்னைக்கு நிவாரண பொருட்கள் அனுப்பி வைப்பு

நிவாரண பொருட்கள் அனுப்பி வைப்பு

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சென்னை நகரமக்களுக்கு நிவாரண பொருட்கள் அனுப்பிவைப்பு

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சென்னை மக்களுக்கு உதவிடும் வகையில் ஆறு கண்டெய்னர் லாரிகளில் திருப்பூரிலிருந்து சென்ற நிவாரண பொருட்களை அமைச்சர்கள் கொடியசைத்து துவக்கி வைத்தனர். மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை , செங்கல்பட்டு , காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்கள் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் உள்ள பொதுமக்களுக்கு உதவிடும் வகையில் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பல்வேறு அமைப்புகளின் சார்பில் நிவாரண பொருட்கள் அனுப்பப்பட்டு வருகிறது. திருப்பூர் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் சேகரிக்கப்பட்ட நிவாரண பொருட்கள் இன்று சென்னைக்கு அனுப்பப்பட்டது.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிடும் வகையில் அரை லிட்டர் முதல் 20 லிட்டர் கேன்கள் வரையிலான 56 ஆயிரத்து 956 லிட்டர் தண்ணீர் கேன்கள் , 36 ஆயிரத்து 426 பிஸ்கட் பாக்கெட்டுகள் , 1900 பிரட் பாக்கெட்டுகள், பால் பவுடர் ,அரிசி உள்ளிட்ட உணவுப் பொருட்களும் 400 பெட்ஷீட் , துண்டு, டீசர்ட் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களும் என ஆறு கண்டெய்னர் லாரிகளில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து அனுப்பி வைக்கப்பட்டது.

இந்த நிவாரண பொருட்கள் அடங்கிய கண்டெய்னர் லாரிகளை மாநில தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் , ஆதி திராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ், மாவட்ட ஆட்சியர் , மேயர் உள்ளிட்டோர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கொடியசைத்து துவக்கி வைத்தனர். சென்னை மக்களுக்கு உதவிடும் வகையில் தொடர்ந்து நிவாரண பொருட்கள் சேகரிக்கப்பட்ட அனுப்பப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story