திருச்செங்கோடு சட்டமன்ற தொகுதி சார்பில் நிவாரண பொருட்கள் அனுப்பி வைப்பு


நிவாரண பொருட்களை அனுப்பி வைத்த ன்னிர்வாகிகள்
மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு திருச்செங்கோடு சட்டமன்ற தொகுதி சார்பில் நிவாரண பொருட்கள் அனுப்பிவைக்கப்பட்டது
சென்னையில் கடந்த வாரம் பெய்த மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு திருச்செங்கோடு சட்டமன்றத் தொகுதி மற்றும் நாமக்கல் மேற்கு மாவட்ட கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் சார்பில் நிவாரண பொருட்கள் தாம்பரம் பகுதிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினரும் கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் ஈ ஆர் ஈஸ்வரன் அவர்கள் நிவாரண பொருட்களை அனுப்பி வைத்தார், நிகழ்ச்சியில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் நாமக்கல் மேற்கு மாவட்ட செயலாளர் நதி ராஜவேல், சிவக்குமார், தங்கமுத்து, லாவண்யா ரவி,நகரமன்ற உறுப்பினர் அசோக்கிமார், ராயல் செந்தில்,நந்தகுமார்,ஜெகதீஸ் கோபால், உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்
Tags
Next Story


