தென் மாவட்ட மக்களுக்கு நிவாரணப்பொருட்கள் அனுப்பி வைப்பு

தென் மாவட்ட மக்களுக்கு நிவாரணப்பொருட்கள் அனுப்பி வைப்பு

நிவாரண பொருட்கள்

தென்மாவட்டங்களான திருநெல்வேலி , தூத்துக்குடி , தென்காசி போன்ற மாவட்ட மக்கள் கடும் மழையினால் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளனர். மாவட்ட ஆட்சித்தலைவர் ராஜ கோபால் சுன்கரா வழிகாட்டுதலின்படி, மாவட்ட நிர்வாகம் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் சார்பில் தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களில் பெய்த கனமழையினால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு பல்வேறு நிவாரண பொருட்கள் அடங்கிய வாகனம் அனுப்பி வைக்கப்பட்டது. 21,790 பிஸ்கட் பாக்கெட்கள், 6,261 குடிநீர் பாட்டில்கள், 560 கிலோ பருப்பு வகைகள், 675 கிலோ சர்க்கரை, 250 கிலோ உப்பு, 250 டீ தூள் பாக்கெட்கள், 5347 கிலோ அரிசி, 2250 லிட்டர் எண்ணெய், 260 கிலோ கோதுமை மாவு, 4000 பிரட் பாக்கெட்கள், 250 சோப்புகள், 22,500 போர்வைகள் மற்றும் துணி வகைகள் என 64,403 எண்ணிக்கையில் ரூ.79,25,47 மதிப்பீட்டிலான பல்வேறு அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய வாகனம் தென் மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

Tags

Next Story