தூத்துக்குடிக்கு நிவாரணப் பொருட்கள் அனுப்பி வைப்பு

தூத்துக்குடிக்கு நிவாரணப் பொருட்கள் அனுப்பி வைப்பு

தூத்துக்குடியில் கனமழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சேலத்திலிருந்து வெள்ள நிவாரணப் பொருட்கள் அனுப்பப்பட்டன. 

தூத்துக்குடியில் கனமழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சேலத்திலிருந்து வெள்ள நிவாரணப் பொருட்கள் அனுப்பப்பட்டன.
தூத்துக்குடி மாவட்டத்தில் கன மழை காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு சேலம் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் வெள்ள நிவாரண பொருட்கள் அடங்கிய தொகுப்பு சேலம் அழகாபுரம் மத்திய கூட்டுறவு சமுதாய கூடத்தில் இருந்து அனுப்பப்பட்டது. மாவட்ட கலெக்டர் கார்மேகம், மாநகராட்சி ஆணையாளர் பாலசந்தர் ஆகியோர் பார்வையிட்டு இந்த பொருட்களை அனுப்பி வைத்தனர். இதில் 3 ஆயிரத்து 870 பாக்கெட் பிரட்கள் , 1 லிட்டர் தண்ணீர் பாட்டில் 1720, 9 ஆயிரத்து 586 பிஸ்கட் பாக்கெட், அரை கிலோ எடை கொண்ட 1000 மில்க் பவுடர்149 பைகளில் மளிகை பொருட்கள், 200 மில்லி லிட்டர் பால் பாக்கெட் 1000 என நிவாரண பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த பொருட்கள் அனைத்தும் தூத்துக்குடி மாவட்டத்தில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மக்களுக்கு வினியோகிக்கப்பட உள்ளது. அப்போது கூடுதல் கலெக்டர் அலர்மேலு மங்கை, உதவி கலெக்டர் சுவாதி, மாவட்ட வருவாய் அதிகாரி மேனகா, கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர் ரவிக்குமார் உள்பட பலர் பங்கேற்றனர்.

Tags

Next Story