செங்கம் : குரங்கு தொல்லையால் பொதுமக்கள் அவதி

செங்கம் : குரங்கு தொல்லையால் பொதுமக்கள்  அவதி

குடியிருப்பு பகுதிகளில் சுற்றும் குரங்குகள் 

செங்கம் மற்றும் சுற்றுவட்ட கிராம பகுதிகளில் குரங்கு தொல்லையால் பொதுமக்கள் பெரிதும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர். கிராம பகுதிகளில் ஏற்கனவே விவசாய நிலங்களில் மான், முயல், பன்றிகள் உள்பட காட்டு விலங்குகளின் தொல்லையால் பயிர்கள் முற்றிலும் சேதம் அடைந்து விவசாயிகள் வேதனையில் உள்ளனர்.

இந்நிலையில் தற்போது கிராமப்புற பகுதிகளில் குரங்குகள் தொல்லை அதிகரித்துள்ளது. செங்கம் அருகே உள்ள சொர்ப்பனந்தல் கிராமத்தில் குரங்குகள் தொல்லை அதிக அளவில் உள்ளதால் கிராமத்தில் பொதுமக்கள் மிகுந்த அவதிக்குள்ளாகி வருகின்றனர். வீட்டினுள் குரங்குகள் வந்து அச்சுறுத்துவதால் எந்த நேரமும் வீட்டின் கதவை பூட்டிய வைத்திருக்க வேண்டிய சூழலில் கிராம மக்கள் உள்ளனர்.

மேலும் மொட்டை மாடியில் அமைக்கப்பட்ட வீட்டின் நீர்த்தேக்க தொட்டி பைப்புகளையும் உடைத்து விடுவதால் தண்ணீர் வீணாக கீழே செல்வதாகவும் மீண்டும் புதிதாக பைப்புகளை வாங்கி பொருத்த வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாகவும் வீட்டின் உரிமையாளர்கள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர். எனவே ஊரக வளர்ச்சி துறை மற்றும் வனத்துறையினர் இணைந்து கிராம பகுதியில் சுற்றிதிரியும் குரங்குகளை பிடித்து காட்டுப்பகுதியில் விட வேண்டும் எனவும் குரங்குகளால் ஏற்படும் தொல்லைகளில் இருந்து உடனடியாக கிராம மக்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகத்திற்கு அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags

Next Story