செங்கம் அருகே அம்மனுக்கு தீ மிதித்து பக்தர்கள் வழிபாடு
ஸ்ரீ சொர்ண வராஹி அம்மனுக்கு தீ மிதித்து பக்தர்கள் வழிபாடு.
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த பக்கிரிபாளையம் ஊராட்சி மேல்செங்கம் புதூர் கிராமம் காமாட்சி நகர் அன்னை ஸ்ரீ சொர்ண வராஹி அம்மனுக்கு அருள்வாக்கு சித்தர் ஸ்ரீலஸ்ரீ பஞ்சாட்சரம்-ஜி தலைமையில் மூலிகை சிறப்பு யாகம் வளர்த்து, பக்தர்கள் பால்குடம் எடுத்து வராஹி அம்மனுக்கு அபிஷேகம் செய்து, அலகு குத்திக்கொண்டு கிராம வீதிகள் தோறும் பம்பை உடுக்கை உடன் வலம் வந்து திருக்கோவில் அருகே ஏற்படுத்திய அக்னி குண்டத்தில் தீ மிதித்து வராஹி அம்மனை வழிபட்டார்கள்.
Next Story