பிளஸ் டூ பொதுத் தேர்வில் செந்தில் மெட்ரிக் பள்ளி சாதனை
தர்மபுரி செந்தில் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் பிளஸ் டூ பொதுத்தேர்வில், நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் எடுத்து 39 மாணவர்கள் சாதனை படைத்துள்ளனர்.
தருமபுரி, செந்தில் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 2023 2024 +2 பொதுதேர்வு எழுதிய அனைத்து மாணவ, மாணவியர்களும் நல்ல மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றுள்ளனர். குறிப்பாக பரத்குமார் - 593 மதிப்பெண்களும், சற்குணப்பிரியா 591 மதிப்பெண்களும், அனிருத் மற்றும் நவநீத கிருஷ்ணன் ரா - 589 மதிப்பெண்களும், 590 மதிப்பெண்களுக்கு பெற்றனர் கணிதம் 12 பேரும், இயற்பியல் 2பேரும். வேதியியல் 2 பேரும் உயிரியல் 6 பேரும்,கணிணி அறிவியல் 5 பேரும்,கணக்குப் பதிவியல் 2 பேரும், வணிகவியல் 4 பேரும் , தாவரவியல் 4 பேரும் கணினி பயன்பாட்டில் 2 பேர் என 100 க்கு 100 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்ற அனைத்து மாணவ மாணவியர்களையும் செந்தில் குழுமத் தலைவர் செந்தில் C.கந்தசாமி, துணைத்தலைவர் K.மணிமேகலை, செந்தில் கல்வி குழுமங்களின் செயலாளர் K.தனசேகர் அவர்களும், நிர்வாக அலுவலர் C.சக்திவேல் அவர்களும் முதல்வர் M.வள்ளியம்மாள், முதல்வர்(நிர்வாகம்) S.M.ரபிக் அஹமத், துணைமுதல்வர் S.கவிதா, மேல்நிலைப்பிரிவு பொறுப்பாசிரியர் A.திருநாவுக்கரசன், மற்றும் ஆசிரியர்கள் வாழ்த்தினார்கள்.
Next Story