சேத்துப்பட்டு மாதா மலையில் செபமாலை திருத்தேர் வீதி உலா.

சேத்துப்பட்டு மாதா மலையில் செபமாலை திருத்தேர் வீதி உலா.

திருத்தேர் வீதிஉலா


திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு அடுத்த நெடுங்குணம் மாதா மலையில் உலக நன்மைக்காக ஒருநாள் தொடர் ஜெபமாலை தூய லூர்து அன்னை தேர் பவனி நடைபெற்றது.

திருவண்ணாமலை மாவட்டம்வேலூர் மறைமாவட்டம் சேத்துப்பட்டுதூய லூர்து அன்னை ஆலயத்தில் 30 நாட்கள் தொடர் செப மாலை நிகழ்ச்சி நடைபெற்றது. நேற்று முன்தினம் போளூர் சாலையில் உள்ள தூய லூர்தன்னை தேவாலயத்தில் இருந்து தூய லூர்து அன்னை மலர்களாலும் மின்சார விளக்குகளாலும் அலங்கரிக்கப்பட்ட திருத்தேரில் சேத்துப்பட்டுவந்தவாசி நெடுஞ்சாலையில் வேலூர் மறைமாவட்ட பரிபாலகர் ஜான் ராபர்ட் தலைமையில் ஜெபமாலை பாடியபடி நடைபெற்ற அதனை தொடர்ந்துநெடுங்குணம் மாதா மலையில் உலக நன்மைக்காக ஒரு நாள் தொடர் ஜெபமாலை சிறப்பு திருப்பலி வேலூர் மலை மாவட்ட பரிபாலகர் ஜான் ராபர்ட் சேத்துப்பட்டு பங்கு தந்தை விக்டர் இன்பராஜ் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.

இதில் திருவண்ணாமலை வேலூர் திருப்பத்தூர் ஆற்காடு ராணிப்பேட்டை வேட்டவலம் சென்னை சேலம் பெங்களூர் உள்பட பல்வேறு பகுதியில் இருந்து நூற்றுக்கணக்கான கிறிஸ்துவர்கள் கலந்து கொண்டு தூய லூர்துதன்னையின் தேரை வடம் பிடித்து இழுத்துநெடுங்குணம் மாதா மலையை கிரிவலம் வந்தனர். பட விளக்கம்: சேத்துப்பட்டு தூய லூர்து அன்னை தேவாலயத்தில்உலக நன்மைக்காக ஒரு நாள் தொடர் ஜெபமாலை பாடியபடிமலர்களாலும் மின்சார விளக்குகளாளும் அலங்கரிக்கப்பட்டதூய லூர்து அன்னை தேர் பவனி வந்தது.

Tags

Next Story