நாடாளுமன்ற தேர்தலில் தனித்துப் போட்டி -நாடார் வாழ்வுரிமை சங்கம்
செய்தியாளர் சந்திப்பு
நாடாளுமன்ற தேர்தலில் கொங்கு மண்டலத்தில் அகில இந்திய நாடார் வாழ்வுரிமை சங்கத்தினர் தனித்துப் போட்டியிட உள்ளதாகவும், பிப்ரவரி 25ஆம் தேதி கோபிசெட்டிபாளையத்தில் வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் நடைபெற உள்ளதாகவும் அச்சங்கத்தின் நிறுவனத் தலைவர் சதா நாடார் தெரிவித்தார்.
அகில இந்திய நாடார் வாழ்வுரிமை சங்கத்தின் முக்கிய நிர்வாகிகள் கூட்டம் அச்சங்கத்தின் நிறுவனத் தலைவர் சதா நாடார் தலைமையில் ஈரோடு அருகே உள்ள திண்டலில் நடைபெற்றது . ஆலோசனைக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த சதா நாடார் கொங்கு மண்டலத்தில் வருகிற நாடாளுமன்ற தேர்தலில் அகில இந்திய நாடார் வாழ்வுரிமை சங்கத்தினர் நாடாளுமன்ற தேர்தலில் தனித்துப் போட்டியிட உள்ளதாகவும் , இது தொடர்பாக பிப்ரவரி 25ஆம் தேதி கோபிசெட்டிபாளையத்தில் வேட்பாளர்கள் அறிமுகம் கூட்டம் நடைபெற உள்ளதாகவும் தெரிவித்தார் . மேலும் சுதந்திரப் போராட்ட வீர்ர் தீரன் சின்னமலையோடு இணைந்து போரிட்ட குணாளன் நாடாரின் முழு உருவச்சிலை அவர் வாழ்ந்த பகுதி என நத்தக்கடையூரில் அமைப்படும் என்று தெரிவித்த சதாநாடார் தமிழக அரசின் சார்பில் குணாளன் நாடாருக்கு சிலையும் மணிமண்டபம் அமைத்து அரசு விழாவாக கொண்டாடப்பட வேண்டும் என கேட்டுக்கொண்டார்
Next Story