கழிவுநீர் கால்வாய் பாலங்களால் தொடர் விபத்து - நடவடிக்கை எடுக்க கோரிக்கை
செக்காலை சாலை
காரைக்குடியில் கழிவுநீர் கால்வாயின் மீது போடப்பட்டுள்ள பாலங்களால் தொடர் விபத்து நடைபெறுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்
சிவகங்கை மாவட்டம், காரைக்குடி செக்காலை சாலை காரைக்குடியின் பிரதான பகுதியாக இருந்து வருகிறது. மதுரை, தேவகோட்டை, ராமேஸ்வரம், திண்டுக்கல் போன்ற முக்கிய நகரங்களுக்கு இச்சாலை வழியாகத்தான் பேருந்துகள் இயக்கப்படுகிறது. ஏராளமான வணிக நிறுவனங்கள் அமைந்துள்ளதால் இச்சாலையில் போக்குவரத்து நெரிசலும் அதிகமாக காணப்படுகிறது. இந்நிலையில், பிரதான சாலையிலிருந்து நகருக்குள் செல்லும் குறுக்கு சாலையோரம் செல்லும் கழிவு நீர் கால்வாயின் மேல் தற்போது சிறிய பாலம் அமைக்கப்பட்டுள்ளது. எவ்வித பாதுகாப்பும் இல்லாமல் ஒப்பந்ததாரர் பாலத்தை அதிக உயரமாக கட்டி இருப்பதால் குறுக்குச் சாலையில் இருந்து பிரதான சாலைக்கு வரும் வாகனங்கள் கட்டுப்பாட்டை இழந்து, பிரதான சாலையில் வரும் வாகனங்கள் மீது மோதி அடிக்கடி விபத்தில் சிக்குவதாக அப்பகுதி மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
Next Story