தொடர் விடுமுறை; கன்னியாகுமரியில் குவிந்த சுற்றுலா பயணிகள்
சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்துள்ள சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டபம், அதன் அருகில் உள்ள 133 அடி உயர திருவள்ளுவர் சிலை ஆகியவற்றை பார்வையிட தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர்.
இந்த நிலையில் தற்போது கிறிஸ்துமஸ் பண்டிகையொட்டி தொடர் விடுமுறை விடப்பட்டுள்ளது. பள்ளிகளில் அரையாண்டு தேர்வு முடிந்து ஜனவரி 3-ம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தொடர் விடுமுறை காரணமாக சுற்றுலாத்தலமான கன்னியாகுமரியில் சுற்றுலாப் பயணிகள் கூட்டம் அலைமோதுகிறது. கிறிஸ்மஸ் பண்டிகையொட்டி கடந்த 22- ஆம் தேதி 6 ஆயிரத்து 524 பேரும், 23 - ஆம் தேதி 8 ஆயிரத்து 211 பேரும், நேற்று 9 ஆயிரத்து 600 பேரும், கிறிஸ்மஸ் பண்டிகை தினமான இன்று மதியம் வரை 9 ஆயிரம் பேரும் படகில் பயணம் செய்து உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.