தொடர் மணல் திருட்டு; விவசாயிகள் புகார்

தொடர் மணல் திருட்டு; விவசாயிகள் புகார்

 மானாமதுரையில் விவசாய நிலங்கள் வழியாக தொடர் மணல் திருட்டு நடைபெறுவதாக விவசாயிகள் புகார் தெரிவித்துள்ளனர்.

மானாமதுரையில் விவசாய நிலங்கள் வழியாக தொடர் மணல் திருட்டு நடைபெறுவதாக விவசாயிகள் புகார் தெரிவித்துள்ளனர்.

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம், திருப்பாச்சேத்தி, மானாமதுரை வழியாக ராமநாதபுரம் வரை வைகை ஆறு செல்கிறது. மணல் திருட்டை தடுக்க போலீசார் மற்றும் வருவாய்த்துறை யினர் அடிக்கடி இரவு நேரத்தில் வைகை ஆற்றில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு ரோந்து சுற்றி வருவதால் மணல் திருட முடியாமல் தவிக்கும் திருட்டு கும்பல்கள் மானாமதுரை வட்டாரத்தில் புது திருட்டில் ஈடுபட்டு வருகின்றன. வைகை ஆற்றை ஒட்டியுள்ள புறம்போக்கு நிலங்களில் விவசாய நிலங்கள் வழியாக சென்று இரவோடிரவாக மணல் திருடி வருகிறது.

பகலில் மண் உள்ள இடத்தை நோட்டமிட்டு இரவு நேரத்தில் ஜேசிபி, டாரஸ் லாரிகளுடன் விவசாய நிலங்கள் வழியாக சென்று மணல் அள்ளி விட்டு அந்த பள்ளத்தை மற்ற மண், கல், மரம் உள்ளிட்டவைகளை வைத்து மூடிவிட்டு சென்று விடுகின்றனர். தகவலறிந்து நில உரிமையாளர்கள் வருவதற்குள் கும்பல் எஸ்கேப் ஆகி விடுகிறது. மானாமதுரை வட்டாரத்தில் துத்திகுளம், ராஜகம்பீரம், கால்பிரவு , கல்குறிச்சி உள்ளிட்ட வைகை ஆற்றை ஒட்டியுள்ள கிராமங்களில் சமீப காலமாக இதுபோன்ற மணல் திருட்டுகள் அதிகரித்து வருவதால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். லாரிகள், ஜேசிபி இயந்திரங்கள் வயல்கள் வழியாக செல்வதால் நிலங்கள் கெட்டித்தன்மை பெற்று விடுகின்றன. அதன்பின் உழவு செய்ய கூடுதலாக பணம் செலவாகி வருகிறது என விவசாயிகள் புகார் தெரிவித்துள்ளனர்

Tags

Next Story