நாட்ரம்பள்ளி பகுதியில் அடுத்தடுத்து திருட்டு - போலீசார் விசாரணை

நாட்ரம்பள்ளி பகுதியில் அடுத்தடுத்து திருட்டு - போலீசார் விசாரணை
X

காவல் நிலையம்

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த கோடியூர் பகுதியைச் சேர்ந்தவர பன்னீர்செல்வம் . இவர் நாட்டறம்பள்ளி பேருந்து நிலையத்தில் சன் ஏஜென்சி என்ற பேட்டரி கடை நடத்தி வருகிறார். இந்த நிலையில் இரவு கடையை மூடிவிட்டு வீட்டிற்கு சென்ற நிலையில் இன்று வழக்கம் போல் வந்தபோது கடையின் ஷட்டர் உடைக்கப்பட்டு இருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது கல்லாவில் வைத்திருந்த இருபது ரூபாய் பணம் அப்படியே இருந்ததை கண்டு பெருமூச்சு விட்டார். அதிக பணம் கிடைக்கும் என்று கஷ்டப்பட்டு கதவை உடைத்து உள்ளே சென்ற திருடனுக்கு உரிமையாளர் கல்லாவில் இருபது ரூபாய் பணம் மட்டுமே வைத்திருந்ததால் அந்த இருபது ரூபாயை கல்லாவில் விட்டுவிட்டு திருடன் ஏமாற்றத்துடன் சென்றுள்ளான். அதனைத் தொடர்ந்து வெலக்கல்நத்தம் பகுதியில் உள்ள அதிமுக ஜோலார்பேட்டை ஒன்றிய செயலாளர் வெள்ளையன் என்பவருக்கு சொந்தமான பேக்கரி கடையை உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர்கள் ரூ.15000 பணம் மற்றும் 20 பாக்கெட் சிகரட்டை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். இந்த சம்பவம் குறித்து பேட்டரி மற்றும் பேக்கரி கடை உரிமையாளர்கள் கொடுத்த புகாரின் பேரில் நாட்றம்பள்ளி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் நாட்றம்பள்ளி அருகே அடுத்தடுத்து நடைபெற்ற திருட்டு சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

Tags

Next Story