தொடர் திருட்டு... பீதியில் கிராம மக்கள் !
கிருஷ்ணகிரி மாவட்டம், மத்தூர் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட கவுண்டனூர் பஞ்.,ல் உள்ள கோடிப்பதி கிராமத்தில் தொடர் திருட்டு சம்பவங்களால் கிராம மக்கள் அச்சத்தில் உள்ளனர். கடந்த 2ல் கோடிப்பதி, எம்.ஜி.ஆர்., நகரைச் சேர்ந்த அலமேலு என்பவரின் 1 லட்சம் மதிப்புள்ள இரண்டு கறவை மாடுகள் திருட்டு போனது. அதேபோல் கவுண்டனூர் முன்னால் பஞ்.,தலைவர் கோடிபதியைச் சேர்ந்த சாம்பசிவம் என்பவரது வீட்டில், பட்டப்பகலில் கடந்த 5ல் வீட்டின் பூட்டை உடைத்து 7 பவுன் தங்க நகைகள் மற்றும் 6 ஜோடி வெள்ளி கொலுசுகள் திருட்டு போனது.
அதேபோல் நேற்று முன்தினம் கோடிப்பதியில் உள்ள திரௌபதியம்மன் பாரத கோவிலில் சாமியின் தாலி உள்ளிட்ட ஒன்னரை பவுன் நகைகள் மற்றும் உண்டிலை மர்ம நபர்கள் திருடிச் சென்ற சம்பவம் அரங்கேறி உள்ளது. இந்த சம்பவங்கள் குறித்து மத்தூர் போலீஸ் ஸ்டேசனில் புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் போலீசார் மவுனம் காத்து வருவதாக கோடிப்பதி, கவுண்டனூர் பஞ்.,க்கு உட்பட்ட மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். தொடர் திருட்டு சம்பவம் குறித்து போலீசார் உரிய நடவடிக்கை எடுப்பதுடன் கோடிப்பதி சுற்று வட்டாரப் பகுதிகளில் இரவு நேரத்தில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.