திருவண்ணாமலையில் தீவிர வாகன சோதனை!

திருவண்ணாமலையில் தீவிர வாகன சோதனை!

வாகன சோதனை

திருவண்ணாமலையில் பறக்கும் படையினர் மூலம் மாவட்ட ஆட்சியர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டார்.
பாராளுமன்ற பொது தேர்தல் 2024 முன்னிட்டு தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இதனையடுத்து திருவண்ணாமலை மாவட்டம் போளூர் - ஆரணி செல்லும் சாலை மங்களமேடு பகுதியில் பறக்கும் படையினர் மூலம் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் தெ. பாஸ்கர பாண்டியன் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.இந்த ஆய்வின்போது மாவட்ட வருவாய் அலுவலர் பிரியதர்ஷினி உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.

Tags

Next Story