ஆதார் மையங்களில் சர்வர் கோளாறு - சரிசெய்ய சிபிஎம் கோரிக்கை

ஆதார் மையங்களில் சர்வர் கோளாறு - சரிசெய்ய சிபிஎம் கோரிக்கை

பைல் படம் 

தூத்துக்குடியில் ஆதார் சேவை மையங்களில் சர்வர் பிரச்சனையை சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கோரிக்கை விடுத்துள்ளது.

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியருக்கு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநகர செயலாளர் முத்து அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில், "மத்திய அரசு ஆதார் அட்டையை மேம்படுத்துமாறு (update ) பொதுமக்களை வலியுறுத்தி வருகிறது. 2024 June 14-க்குள் இலவசமாக update செய்து கொள்ளலாம் அறிவிக்கப்பட்டுள்ளது. அதே போல் மாணவ-மாணவியர்கள் தங்களுடைய ஆதாரில் உள்ள திருத்தம் செய்யவும் பொதுமக்கள் தங்களது மற்றும் குடும்ப உறுப்பினாகளின் ஆதார் அட்டைகளை மேம்படுத்திட ஆதார் மையங்களில் குவிந்துள்ளனர்.

ஆனால் ஆதார் சர்வர் (இணையதளம்) சரியாக இயங்கவில்லை. மக்கள் காத்துக் கிடக்கின்றனர். இச்சூழலில் தபால் நிலையத்தில் மட்டும் வேலை செய்கிறது என மக்கள் தற்போது தபால் நிலையத்திற்கு செல்கின்றனர். இதனால் மக்கள் கூட்டம் அதிகமாக கூடும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே தாங்கள் தலையிட்டு வங்கி உள்ளிட்ட அனைத்து ஆதார் மையங்களிலும் சர்வர் நல்ல முறையில் செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

Tags

Next Story