ரோட்டரி சங்கங்களுக்கு சேவை விருதுகள்!

ரோட்டரி சங்கங்களுக்கு சேவை விருதுகள்!

புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள அனைத்து ரோட்டரி சங்கங்களுக்கும், சிட்டி ரோட்டரி சங்கம் சார்பில் சேவை விருதுகள் வழங்கும் விழா நடைபெற்றது.


புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள அனைத்து ரோட்டரி சங்கங்களுக்கும், சிட்டி ரோட்டரி சங்கம் சார்பில் சேவை விருதுகள் வழங்கும் விழா நடைபெற்றது.

புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள அனைத்து ரோட்டரி சங்கங்களுக்கும், சிட்டி ரோட்டரி சங்கம் சார்பில் சேவை விருதுகள் வழங்கும் விழா நடைபெற்றது. விழாவுக்கு சங்கத் தலைவர் அசோகன் தலைமை வகித்தார். மாநில சட்டத்துறை அமைச்சர் எஸ். ரகுபதி கலந்து கொண்டு ரோட்டரி சங்கங்களின் சேவைப் பணிகளைப் பாராட்டி சேவை விருதுகளை வழங்கிப் பேசினார்.மாவட்டத்திலுள்ள ரோட்டரி சங்கங்களின் தலைவர்கள், செயலர்கள், மண்டல ஒருங்கிணைப்பாளர்கள், துணை ஆளுநர்களுக்கு இந்த விருதுகள் வழங்கப்பட்டன.

புதுக்கோட்டை சட்டப்பேரவை உறுப்பினர் வை. முத்துராஜா, நகர்மன்றத் தலைவர் செ. திலகவதி, துணைத் தலைவர் எம். லியாகத்அலி, ரோட்டரி மாவட்ட ஆளுநர் ஆர். சுப்பிரமணியன் உள்ளிட்டோரும் பங்கேற்றன முன்னதாக, குழிபிறை ஊராட்சித் தலைவரும், சிட்டிரோட்டரி சங்க முன்னாள் தலைவருமான எஸ்.அழகப்பன் வரவேற்றார். சங்க ஆலோசகர் கண.மோகன் ராஜா ஒருங்கிணைத்தார். முடிவில் சங்கப் பொருளாளர் சங்கர் நன்றி கூறினார்.

Tags

Next Story