மீன்வளத்துறை விசைப்படகிற்கு தீ வைப்பு - மேச்சேரி போலீசார் விசாரணை

மீன்வளத்துறை விசைப்படகிற்கு தீ வைப்பு - மேச்சேரி போலீசார் விசாரணை
எரிந்து சேதமான விசைப்படகு  
மீன்வளத் துறைக்கு சொந்தமான விசைப்படகில் மர்ம நபர்கள் தீ வைத்ததில் படகு எரிந்து சேதமானது. இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

மேட்டூர் அணையில் ஆண்டுக்கு 70 லட்சம் மீன் குஞ்சுகள் மீன்வளத் துறை சார்பில் விடப்பட்டு அணையில் வளர்க்கப்படுகிறது. மீன் குஞ்சுகள் பெரிதானவுடன் உரிமம் பெற்ற 2016 மீனவர்கள் கொண்டு மீன்கள் பிடிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அணையில் தடை செய்யப்பட்ட வலைகளைக் கொண்டு மீன் பிடிப்பதை தடுக்கவும், மீன்பிடி உரிமம் இல்லாத பரிசல்களை பறிமுதல் செய்தல், நாட்டு வெடிகுண்டு வீசி மீன் பிடிக்கும் கும்பல் மீது நடவடிக்கை எடுக்க மீன்வளத் துறையினருக்கு ரோந்து செல்ல விசைப்படகு வழங்கப்பட்டது. இந்நிலையில் கீரை காரனுர் காவிரி ஆற்றில் நிறுத்தி வைக்கப்பட்ட மீன்வளத் துறைக்கு சொந்தமான சம்பந்தமான விசைப்படகு நள்ளிரவில் மர்ம நபர்களால் தீ வைத்து எரிக்கப்பட்டது. இதில் படகு முழுவதும் எரிந்து சேதம் அடைந்தது.இது குறித்து அப்பகுதி மீனவர்கள் மீன்வளத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். மீன் வளதுறை துனை இயக்குனர் உமா கலைச்செல்வி மேச்சேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து தீ வைத்த மர்ம நபர்கள் குறித்து அப்பகுதியில் விசாரணை நடத்தி வருகின்றனர். தீ விபத்தில் சேதம் அடைந்த விசைப்படகின் மதிப்பு 2 லட்சம் இருக்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர். நள்ளிரவில் விசைப்படகிற்கு தீ வைத்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags

Next Story