சேத்துப்பட்டு : சோனியா காந்தி பிறந்தநாள் கொண்டாட்டம்

சேத்துப்பட்டு : சோனியா காந்தி பிறந்தநாள் கொண்டாட்டம்

மரக்கன்றுகள் வழங்கல் 

சேத்துப்பட்டு முன்னாள் மாவட்ட காங்கிரஸ் தலைவர் வி பி அண்ணாமலை தலைமையில் அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா காந்தி பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு காங்கிரஸ் அலுவலகத்தில் அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா காந்தி 77வது பிறந்தநாள் விழா முன்னிட்டு முன்னாள் மாவட்ட தலைவர் வி பி அண்ணா மலை கேக் வெட்டி கொண்டாடினார். தொண்டர்களுக்கு கேக் ,இனிப்பு ,மரக்கன்று டிராவல் பேக் ,கருப்பு கவுனி அரிசி ஆகியவற்றை வழங்கினார். நிகழ்ச்சியில் மாவட்ட துணை தலைவர் அன்பழகன், மாநில பொதுக்குழு உறுப்பினர் கன்னிகா ,மாவட்ட பொதுச் செயலாளர் மஸ்கர் பாஷா ,வட்டாரத் தலைவர்கள் விநாயகமூர்த்தி, முரளி, முருக விஜயகாந்த், எஸ் பி மணி, சுகன்யா சேத்துப்பட்டு நகர தலைவர் ஜாபர் அலி பேரூராட்சி மன்ற உறுப்பினர் கோகுல்ராஜ் இளைஞர் காங்கிரஸ் வெங்கடேசன் ,தினகரன் ,சுபாஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story