வாக்குபதிவு இயந்திரத்தில் சின்னம் பொருத்தும் பணி ஆய்வு

வாக்குபதிவு இயந்திரத்தில் சின்னம் பொருத்தும் பணி ஆய்வு

மாவட்ட ஆட்சியர் ஆய்வு

கிள்ளியூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் வேட்பாளர்களின் பெயர் மற்றும் சின்னம் பொருத்தும் பணியை மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் ஆய்வு செய்தார்.

கன்னியாகுமரி மாவட்டம், திருவட்டார் வட்டாட்சியர் அலுவலகம் மற்றும் கிள்ளியூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் வாக்குச்சாவடிகளுக்கு கணிணி மூலம் கலக்கல் முறையில் ஓதுக்கீடு செய்யப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் மற்றும் வாக்கு சரிபார்க்கும் காகித தணிக்கை சோதனை இயந்திரங்களில் வேட்பாளர் பெயர் மற்றும் சின்னம் அடங்கிய பேலட் பேப்பர் ஒட்டும் பணியினை மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் ஸ்ரீதர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு தெரிவிக்கையில்.இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தின் படி கன்னியாகுமரி பாராளுமன்ற பொதுத்தேர்தல் மற்றும் விளவங்கோடு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் வேட்பாளர் பெயர் மற்றம் சின்னம் அடங்கிய பேலட் பேப்பல் ஒட்டும் பணி நடைபெற்று வருகிறது.

கன்னியாகுமரி, நாகர்கோவில், குளச்சல், பத்மநாப்புரம், விளவங்கோடு. கிள்ளியூர் ஆறு சட்டமன்ற தொகுதி வாரியாக கன்னியாகுமரி பாராளமன்ற பொதுத்தேர்தலுக்கான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் வேட்பாளர் பெயர் மற்றும் சின்னம் அடங்கிய பேலட் பேட்பர் ஒட்டும் பணி நடைபெற்று வருகிறது. வாக்குச்சாவடிகளுக்கு கிள்ளியூர் வட்டாட்சியர் அலுவலகத்திலும், கணினி மூலம் கலக்கல் முறையில் ஒதுக்கீடு செய்யப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் மற்றும் வாக்கு சரிபார்க்கும் காகித தணிக்கை சோதனை இயந்திரங்களில் வேட்பாளர் பெயர் மற்றும் சின்னம் அடங்கிய பேலட் பேப்பர் ஒட்டும் பணிகள் நடைபெற்று வந்தது.

கிள்ளியூர் சட்டமன்றத்திற்குட்பட்ட வாக்குச்சாவடி மையங்களுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் மற்றும் வாக்கு சரிபார்க்கும் காகித தணிக்கை சோதனை இயந்திரங்களில் வேட்பாளர் பெயர் மற்றும் சின்னம் அடங்கிய பேலட் பேப்பர் ஒட்டும் பணிகள் கிள்ளியூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்று வருவதை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இவ்வாறு மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் ஸ்ரீதர் தெரிவித்தார்.

Tags

Next Story