லோக் அதாலத்தில் 1947 வழக்குகளுக்கு தீர்வு

லோக் அதாலத்தில் 1947 வழக்குகளுக்கு தீர்வு

லோக் அதாலத்

தேனி மாவட்ட நீதிமன்றத்தில் நடந்த லோக் அதாலத்தில் 1947 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது.

தேனி மாவட்டம், தேசிய சட்டப் பணிகள் ஆணைக்குழு மற்றும் தமிழ்நாடு மாநில சட்டப் பணிகள் ஆணைக்குழு அறிவுறுத்தலின் படி, பெரியகுளம், உத்தமபாளையம், ஆண்டிபட்டி மற்றும் போடிநாயக்கனூர் வட்டத்திற்குட்பட்ட அனைத்து நீதிமன்றங்களிலும், தேனி மாவட்ட நீதிமன்றத்திலும் இன்று(09.03.2024) தேசிய மக்கள் நீதிமன்றம் (லோக் அதாலத்) நடைபெற்றது.

தேனி மாவட்ட நீதிமன்றத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம் (லோக் அதாலத்) முதன்மை மாவட்ட நீதிபதி அறிவொளி அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இதில் மோட்டார் வாகன விபத்து, இழப்பீடு சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் நிலுவையிலுள்ள வழக்குகள், சொத்து மற்றும் பண சம்பந்தப்பட்ட உரிமையியல் வழக்குகள், சமாதானம் செய்யக்கூடிய குற்ற வழக்குகள், ஜீவனாம்சம், நில ஆக்கிரமிப்பு வழக்குகள், தொழிலாளர் நலன் இழப்பீடு வழக்குகள், கல்விக்கடன், வங்கிக்கடன் சம்பந்தமான வழக்குகள், குடும்ப வன்முறை சட்ட வழக்கு, காசோலை வழக்குகள், நுகர்வோர் வழக்குகள், வருவாய் துறை சம்பந்தப்பட்ட வழக்குகள் மற்றும் இதர பொது பயன்பாட்டு வழக்குகள் போன்றவை பல்வேறு வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது.

மேலும், வாகன விபத்துக்கான இழப்பீட்டுத் தொகை ரூ.60 லட்சம் பெறுவதற்கான ஆணையினை முதன்மை மாவட்ட நீதிபதி அறிவொளி பாதிக்கப்பட்ட ஒரு நபருக்கு வழங்கினார். இன்றைய தினம் மாவட்டம் முழுவதும் உள்ள நீதிமன்றங்களில் நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகள் மற்றும் வங்கிகளில் வராக்கடன்கள் என மொத்தம் 1947 – வழக்குகளுக்கு ரூ.8.24 கோடி மதிப்பில் தீர்வு காணப்பட்டுள்ளது.

Tags

Read MoreRead Less
Next Story