சேலத்தில் சேவாதள காங்கிரசார் ஆர்ப்பாட்டம்

X
ஆர்ப்பாட்டம்
சேலம் மாநகர் மாவட்ட சேவாதள காங்கிரஸ் சார்பில் தாதகாப்பட்டி கேட் அருகில் ஆர்ப்பாட்டம் நடந்தது. தமிழ்நாடு சேவாதள காங்கிரஸ் தலைவர் விஜயன் தலைமை தாங்கினார். மாநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவர் பாஸ்கர் முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் கிராமப்புற வேலை வாய்ப்பை உறுதிப்படுத்த வேண்டும். சாதி வாரி கணக்கெடுப்பை அமல்படுத்த வேண்டும். 14 எம்.பி.க்கள் இடை நீக்கத்தை கண்டிப்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. ஆர்ப்பாட்டத்தில் மாநகர பொருளாளர் ராஜகணபதி, வர்த்தக பிரிவு தலைவர் சுப்பிரமணியம், சேவாதள மாநில துணைத்தலைவர் வெங்கட்ராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கோரிக்கைகள் குறித்து கோஷங்கள் எழுப்பினர்.
Next Story
