மறுமணம் செய்த ஏழு குடும்பங்கள் ஒதுக்கி வைப்பு: விருதுநகரில் பரபரப்பு

மறுமணம் செய்த ஏழு குடும்பங்கள் ஒதுக்கி வைப்பு: விருதுநகரில் பரபரப்பு

பாதிக்கப்பட்டவர்கள் மனு அளிப்பு

மறுமணம் செய்த ஒரே சமூகத்தைச் சேர்ந்த ஏழு குடும்பங்களை கிராமத் தலைவர்கள் ஊரை விட்டு ஒதுக்கி வைத்துள்ள சம்பவம் விருதுநகர் மாவட்டத்தில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.

விருதுநகர் மாவட்டம் சிவகாசி மேல பெத்துல பட்டி கிராமத்தில் வசிக்கும் முனியாண்டி மகன் சௌந்தரபாண்டி. இவரது சகோதரி பரமேஸ்வரிக்கு அதை கிராமத்தைச் சேர்ந்த குஞ்சலையா என்பவருக்கும் கடந்த 9.3. 2017 திருமணம் நடைபெற்றது.

திருமணம் முடிந்த நான்கு நாட்களில் அவரது கணவர் திடீர் மரணம் அடைந்தார். அதன் பின்பு சகோதரியை அவரது பாதுகாப்பில் பராமரித்து வந்துள்ளார். இந்நிலையில் சௌந்தர பாண்டியின் தாய் மாமா துரைக்கண்ணு முயற்சியால் சகோதரி பரமேஸ்வரியின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு,

தூத்துக்குடி மாவட்டம் எட்டையாபுரம் பேரிலோன்பட்டியை சேர்ந்த ராமகிருஷ்ணன் மகன் நவநீதகிருஷ்ணன் என்பவருக்கும் பரமேஸ்வரிக்கும் கடந்த 17. 9. 2023 அன்று விளாத்திகுளம் மீனாட்சி அம்மன் கோயிலில் மறு திருமணம் நடந்து முடிந்து தற்போது 5 மாத கர்ப்பிணியாக வருகிறார். பரமேஸ்வரிக்கு மருந்து திருமணம் முடித்து வைத்த ஒரே சமூகத்தைச் சேர்ந்த பூசாரி நாயக்கர்,

சக்கையா, முனியசாமி, சுப்பையா, லட்சுமணன், பெரிய குஞ்சுலு, முனியாண்டி ஆகிய ஏழு பேரின் குடும்பங்களை சேர்ந்த உறுப்பினர்கள் ஊர் கட்டுப்பாட்டை மீறியதாக கூறி ‌ஊர் கூட்டம் போட்டு ஊரைவிட்டு ஒதுக்கி வைத்துள்ளனர். வரும் சிவராத்திரி திருவிழாவில் கலந்து கொள்ள ஏழு குடும்பங்களுக்கு அனுமதிக்க கூடாது என்றும் அத்தியாவசிய பொருட்கள் வாங்க கூடாது என்று கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது. இதனால் ஊரை விட்டு ஒதுக்கப்பட்டு பாதிக்கப்பட்டுள்ள ஏழு குடும்பத்தினர் இன்று விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் எஸ்.பி பெரோஸ் கான் அப்துல்லாவை சந்தித்து தங்களை கிராமத்து விட்டு ஒதுக்கி வைத்துள்ள கிராமத் தலைவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி புகார் மனுவை அளித்துள்ளனர்.

புகார் மனுவை பெற்றுக்கொண்ட எஸ். பி இச்சம்பவம் குறித்து உரிய விசாரணை நடத்தப்படும் என தெரிவித்துள்ளதாக புகார் அளிக்க சென்ற குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

Tags

Next Story