குடிநீரில் கழிவு நீர் கலப்பு - பொதுமக்கள் சாலை மறியல்
சாலை மறியல்
சேலம் மாவட்டம், ஓமலூர் அருகே தாராபுரத்தில் சாக்கடை நீர் குடிநீரில் கலப்பதாகவும், புதிதாக சாக்கடை கால்வாய் கட்டி கொடுக்க வேண்டும் எனவும் ஊராட்சி நிர்வாகத்திடம் பலமுறை பொதுமக்கள் முறையிட்டுள்ளனர். ஆனால் ஊராட்சி நிர்வாகம் எவ்வித நடவடிக்கையும் எடுக்காததால் அப்பகுதி மக்கள் மூன்றாவது முறையாக செம்மாண்டப்பட்டியில் இருந்து சேலம் செல்லும் சாலையில் கற்களையும், முட்களையும் வைத்து நேற்று சாலை மறியலில் ஈடுபட்டனர்.இதனால் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு சென்றனர். சம்பவம் அறிந்த அதிகாரிகள் மற்றும் போலீசார் பொதுமக்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்திய பின்னர் பொதுமக்கள் கலைந்து சென்றனர்.
Tags
Next Story