ஸ்மார்ட் சிட்டி சாலையில் கழிவுநீர்- நோய் தொற்று பரவும் அபாயம்

ஸ்மார்ட் சிட்டி சாலையில் கழிவுநீர்- நோய் தொற்று பரவும் அபாயம்
X

பீச்சி அடிக்கும் கழிவுநீர்


ஸ்மார்ட் சிட்டி சாலையில் கழிவுநீர் செல்வதால் நோய் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

மதுரையில் பெரும்பாலான வார்டுகளில் உள்ள குடிநீர் குழாய்களும், பாதாள சாக்கடைகளும், பல ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்டவை. அதன்பின் எந்த ஒரு குடிநீர் குழாய்களும், பாதாள சாக்கடை குழாய்களும் சரியாக மாநகராட்சி சார்பில் முறையாக பாராமரிக்கப்படவில்லை. மாநகரின் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் வட மற்றும் தென்கரை மக்கள் தடையின்றி இரு நகரப் பகுதிகளுக்கும் வந்து செல்லும் வகையில் வைகை ஆற்றின் இரு கரைகளில் 'ஸ்மார்ட் சிட்டி' சாலை அமைக்கப்பட்டது.

மாநகராட்சி சார்பில் ரூ.81.41 கோடியும், நெடுஞ்சாலைத் துறை ரூ.300 கோடியும் நிதி ஒதுக்கீடு செய்து இணைந்து வைகை ஆற்றின் இரு கரைகளிலும் ஸ்மார்ட் சிட்டி அமைக்கப்பட்டது இந்நிலையில் குருவிக்காரன் சாலை அருகே உள்ள ஸ்மார்ட் சிட்டி சாலையில் புதிதாக அமைக்கப்பட்ட பாதாள சாக்கடை முழுவதுமாக நிரம்பி பீச்சி அடிக்கிறது.

நாளொன்றுக்கு பல்லாயிரக்கணக்கான வாகனங்கள் புதிதாக அமைக்கப்பட்ட அந்த சாலையை பயன்படுத்தும் நிலையில் பாதாள சாக்கடை கழிவுநீர் நிரம்பி வெளியேறுவதால் அப்பகுதியில் செல்லும் வாகன போட்டிகள் பெரும் சிரமத்திற்கு உள்ளாவதோடு மட்டுமல்லாமல் நோய் தொற்று பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. மதுரையில் டெங்கு காய்ச்சல் அதிகமாக பரவி வரும் நிலையில் இதுபோன்று பாதாள கழிவுநீர் அடைப்புகளை உடனடியாக மாநகராட்சி நிர்வாகம் சரி செய்ய வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

Tags

Next Story