உதகை சாலையில் கழிவுநீர்: பொதுமக்கள் அவதி

உதகை சாலையில் கழிவுநீர்: பொதுமக்கள் அவதி

சாலையில் வழிந்து ஓடும் கழிவுநீர்

உதகை சாலையில் கழிவுநீர் கசிந்து ஓடுவதால் பொதுமக்கள் அவதிக்கு உள்ளாகி உள்ளனர்.

நீலகிரி மாவட்டம் உதகை அப்பர் பஜார் சாலையில் நிரம்பி வழிந்தோடும் கழிவு நீரால் கடும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர். வழிந்து ஓடும் கழிவு நீரால் பாதசாரிகளுக்கு இடையூறு ஏற்ப்படுவதோடு அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகின்றது.

மேலும் வாகனங்கள் கடந்து செல்லும்போது பாதசாரிகள் மீது கழிவு நீரை தெறிக்கும் நிலை காணப்படுகின்றது.எனவே நகராட்சி நிர்வாகம் உடனடியாக கழிவுநீர் கசிவை சீரமைத்து தர வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags

Next Story