சாலையில் வழிந்தோடிய கழிவுநீர் - சரி செய்த மாநகராட்சி

சாலையில் வழிந்தோடிய கழிவுநீர் - சரி செய்த மாநகராட்சி

சரிசெய்யும் பணி

நெற்குன்றம் பகுதியில் பக்கவாட்டு கால்வாயில் நிரம்பி, சாலையில் கழிவு நீர் வழிந்தோடியதால் பொதுமக்கள் பாதிப்படைந்தனர். இந்நிலையில் மாநகராட்சி ஊழியர்கள், பக்கவாட்டு கால்வாயில் உள்ள அடைப்பை அகற்றி, சாலையில் கழிவு நீர் வழிந்தோடாமல் நடவடிக்கை மேற்கொண்டனர்.
வளசரவாக்கம் மண்டலம், நெற்குன்றம் 145வது வார்டில், 210 தெருக்கள் உள்ளன. இதில், 150 தெருக்களில் மழைநீர் வடிகால் அமைக்கப்பட்டன. இவற்றில் பல மழைநீர் வடிகால்கள் சிதிலமடைந்த நிலையில் உள்ளன. இந்த நிலையில் மீதம் உள்ள 60 தெருக்களில் இன்னும் மழைநீர் வடிகால் அமைக்கப்படாமல் உள்ளது. சமீபத்தில் சென்னையில் பெய்த மழையால், பல மழைநீர் வடிகால்கள் நிரம்பி உள்ளன. இதில், நெற்குன்றம் அகத்தியர் நகர் 1வது தெருவில் உள்ள பக்கவாட்டு கால்வாயில் நிரம்பி, சாலையில் கழிவு நீர் வழிந்தோடியது. இதனால், இச்சாலையில் நடந்து செல்லும் முதியவர்கள் மற்றும் குழந்தைகள் தொற்று நோயால் பாதிக்கப்படும் நிலை இருந்தது. இந்நிலையில் அப்பகுதியை ஆய்வு செய்த மாநகராட்சி ஊழியர்கள், பக்கவாட்டு கால்வாயில் உள்ள அடைப்பை அகற்றி, சாலையில் கழிவு நீர் வழிந்தோடாமல் நடவடிக்கை மேற்கொண்டனர்.

Tags

Next Story