சாக்கடை கால்வாயில் தேங்கி நிற்கும் கழிவு நீர்

சாக்கடை கால்வாயில் தேங்கி நிற்கும் கழிவு நீர்

சாக்கடை கால்வாயில் தேங்கி நிற்கும் கழிவு நீர்

திண்டுக்கல் மாவட்டத்தில் அரசு மருத்துவமனை நுழைவாயில் அருகே சாக்கடை கால்வாய் செல்கிறது. அதில் அடைப்பு ஏற்பட்டு சீர்கேடு மற்றும் நோய் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டு வருகிறது.
திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூரில் அரசு மருத்துவமனை உள்ளது. இங்கு சுற்று வட்டாரத்தைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இங்கு மருத்துவமனையை தரம் உயர்த்திக் கொடுக்க வேண்டும் என்று ஏராளமான கோரிக்கைகளை பொதுமக்கள் முன்னிறுத்தி வருகின்றனர். இந்நிலையில் மருத்துவமனை செல்லும் நுழைவாயில் அருகே ராட்சத சாக்கடை கால்வாய் செல்கிறது. தற்போது கால்வாயில் சாக்கடைஅதில் கழிவுநீர் குட்டை போல் மருத்துவமனை நுழைவாயில் அருகே தேங்கி நிற்பதால் சுகாதார சீர்கேடு மற்றும் நோய் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டு வருகிறது.
Next Story