கழிவுநீர் டேங்கர் லாரிகள் ஸ்டிரைக்

கழிவுநீர் டேங்கர் லாரிகள் ஸ்டிரைக்

கும்மிடிப்பூண்டில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்குமாறு வலியுறுத்தி, கழிவுநீர் டேங்கர் லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.  

கும்மிடிப்பூண்டில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்குமாறு வலியுறுத்தி, கழிவுநீர் டேங்கர் லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

கும்மிடிப்பூண்டி பகுதியில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க வலியுறுத்தி, கழிவுநீர் டேங்கர் லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

கும்மிடிப்பூண்டி பகுதியில் உள்ள தனியார் கழிவுநீர் டேங்கர் வாகனங்கள் பொது இடங்களில் கழிவுநீர் திறந்து விடுவதை வழக்கமாக கொண்டுள்ளன. இந்நிலையில், கடந்த வாரம் மழைநீர் கால்வாயில் கழிவுநீர் திறந்துவிட்ட டேங்கர் லாரியை, கும்மிடிப்பூண்டி பேரூராட்சி நிர்வாகத்தினர் பறிமுதல் செய்து, சிப்காட் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். இரு டேங்கர் லாரிகளின் உரிமையாளர்களுக்கு தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் விளக்கம் கேட்டு 'நோட்டீஸ்' அனுப்பப்பட்டது. இந்நிலையில், நேற்று முன்தினம் முதல், டேங்கர் லாரிகளின் உரிமையாளர்கள் சார்பில் வேலை நிறுத்த போராட்டம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கும்மிடிப்பூண்டி அடுத்த வேர்க்காடு பகுதியில், சென்னை -- கோல்கட்டா தேசிய நெடுஞ்சாலையின் இணைப்பு சாலையில், 15க்கும் மேற்பட்ட கழிவுநீர் டேங்கர் வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ளன.

Tags

Next Story