ரயில் நிலையம் முன் குளம் போல் தேங்கிய சாக்கடை நீர்

ரயில் நிலையம் முன் குளம் போல் தேங்கிய சாக்கடை நீர்

கழிவுநீரை அகற்றிய பணியாளர்கள்

கோவை ரயில் நிலையத்தின் முன் தேங்கிய சாக்கடை நீரை பாதுகாப்பு உபகரணங்கள் இன்றி மாநகராட்சி ஊழியர்கள் அகற்றினர்.

கோவை நகரின் மைய பகுதியான ரயில் நிலையம் முன் சாக்கடையில் இருந்து வெளியேறிய கழிவு நீர் சாலையில் குளம் போல் தேங்கி நின்றதால் பொதுமக்கள் மற்றும் பயணிகள் பெரிதும் அவதிப்பட்டனர்.கோவை மார்கமாக நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு ரயில்கள் இயக்கபட்டு வரும் நிலையில் பிற மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களுக்கு பயணிக்க தினந்தோறும் ஆயிரக்கணக்கான பயணிகள் ரயில் நிலையம் வந்து செல்கின்றனர்.இந்நிலையில் இன்று ரயில் நிலையம் எதிரில் பாதாள சாக்கடையில் ஏற்பட்ட அடைப்பின் காரணமாக கழிவு நீர் வெளியேறியதால் துர்நாற்றம் வீசியது.தீயணைப்புத்துறை அலுவலகம் அருகில் இருந்து லங்கா கார்னர் வரை சுமார் அரை கி.மீட்டர் வரை சாக்கடை நீர் சாலையில் சென்றதால் கழிவு நீரின் இடையே பொதுமக்கள் நடந்து செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது.

ரயில் பயணம் மேற்கொள்ள இருந்த பயணிகளும் சாக்கடை நீரை கடந்து ரயில் நிலையம் நுழைவாயிலுக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது.ரயில் நிலையம் எதிர்புறம் ஏராளமான தங்கும் விடுதிகள் மற்றும் நகரின் முக்கிய பகுதிகள் செல்ல பேருந்து நிறுத்தம் நிற்குமிடம் எதிர் திசையில் உள்ள நிலையில் சாலையை கடக்க முடியாமல் மூக்கை மூடியபடி பொதுமக்கள் சென்ற நிலையில் அப்போது ரயில் நிலையத்தில் இருந்த வெளியேறிய பயணி ஒருவர் இந்தியா ஒளிர்கிறது என கமெண்ட் அடித்தபடி சென்றார்.இந்நிலையில் சாக்கடை அடைப்பை சுத்தம் செய்யும் பணியை மாநகராட்சி ஊழியர்கள் மேற்கொண்ட நிலையில் பாதுகாப்பு உபகரணங்கள் இன்றி பணியை மேற்கொண்டதால் நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது.

Tags

Next Story