வடிகால் ஆக்கிரமிப்பால் மழைநீருடன் கழிவுநீர்

வடிகால் ஆக்கிரமிப்பால் மழைநீருடன் கழிவுநீர்

 ஸ்ரீபெரும்புதுாரில்கழிவுநீர் வீடுகளின் முன் தேங்கி நிற்பதால், அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்படுவதோடு, நோய்த் தொற்று பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.

ஸ்ரீபெரும்புதுாரில்கழிவுநீர் வீடுகளின் முன் தேங்கி நிற்பதால், அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்படுவதோடு, நோய்த் தொற்று பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதுாரில், மழைநீர் வடிகால் அக்கிரமிப்பு செய்யப்பட்டதால், லேசான மழைக்கே மழைநீருடன் கழிவுநீர் கலந்து வீடுகளை சூழ்ந்து சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது.

ஸ்ரீபெரும்புதுார் பேரூராட்சிக்குட்பட்ட 14வது வார்டில், 200க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இங்கு, பிள்ளையார்கோவில் தெருவில் முறையான மழைநீர் வடிகால்வாய் வசதி இல்லை. இந்த நிலையில், தாம்பரம் -- ஸ்ரீபெரும்புதுார் சாலையை ஓட்டி உள்ள மழைநீர் கால்வாய் துார்ந்து போய் உள்ளதால். மேலும், கால்வாயில் மண்ணை கொட்டி, ஆக்கிரமித்து கடைகள் கட்டப்பட்டுள்ளன.

இதனால், நேற்று காலை பெய்த லேசான மழைக்கே, மழைநீருடன் கழிவுநீர் கலந்து, வீடுகளில் புகுந்தது. கழிவுநீர் வீடுகளின் முன் தேங்கி நிற்பதால், அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்படுவதோடு, நோய்த் தொற்று பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. எனவே, மழைநீர் வடிகாலில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்றி, மழைநீர் சீராக வெளியேற பேரூராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags

Next Story