ஆத்தூர் : பெரியார் சிலை அருகில் சாக்கடை அடைப்பு துர்நாற்றம் வீசும் அவலம்

சாக்கடை அடைப்பு

ஆத்தூர் பெரியார் சிலை அருகே சாக்கடை கால்வாய் குப்பைகள் அதிகம் தேங்கி துர்நாற்றம் வீசி வருவதால் நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளதால் சாக்கடை தூர்வார பொதுமக்கள் கோரிக்கை
சேலம் மாவட்டம் ஆத்தூர் நகராட்சிக்குட்பட்ட பேருந்து நிலையம் அருகே பெரியார் சிலை அமைந்துள்ளது. இந்த பெரியார் சிலை அருகில் சாக்கடை கால்வாய் அமைக்கப்பட்டு அந்த கால்வாய் வழியாக சாக்கடை கழிவு நீர் வெளியே செல்ல முடியாமல் குப்பைகள் அடைத்து அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசி வருவதால் அதன் அருகே செயல்பட்டு வரும் உணவகம் பழக்கடைகள் அவ்வளியாகச் செல்லும் பொதுமக்கள் துர்நாற்றத்தால் மிகுந்த அவதிக்குள்ளாகி வருவதால் உடனடியாக சாக்கடை அடைப்பை சரிசெய்ய நடவடிக்கை எடுக்க கோரி சமூக ஆர்வலர்களும் பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story


