பாபநாசம் அருகே பெருமாக்கநல்லூரில் வாய்க்கால் தூர் வாரும் பணி

வாய்க்கால் தூர்வாரும் பணி
பாபநாசம் அருகே பெருமாக்கநல்லூரில் பெருமாக்க நல்லூர் பாசன வாய்க்கால் தூர் வாரும் பணி நடந் து வருகிறது. இந்த தூர் வாரும் பணி முறையாக நடைப் பெறவில்லை என அப் பகுதி விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர். அவர்கள் கூறும் போது இந்த வாய்க்கால் பெருமாக்க நல்லூருக்கு பாசன வாய்க்காலாகவும், வடிகாலாகவும், காவலூருக்கு பாசன வாய்க்காலாகவும் பயன்படுகிறது.
இந்த வாய்க்காலை 3 கிலோ மீட்டர் தூரம் தூர் வார வேண்டும். ஆனால் தற்போது நடந்து வரும் தூர் வாரும் பணி பெயரளவில், மண்ணை சுரண்டுகின்றனர். அகலமாக, ஆழமாக தூர் வாரப் படவில்லை.
இந்த வாய்க்காலால் 500 ஏக்கருக்கு மேல் பாசன வசதி பெறுகிறது. 6, 7 வருடங்களுக்கு முன்பு தான் இந்த வாய்க்கால் தூர் வாரப் பட்டது. இந்த வாய்க்காலால் இரண்டு ஊராட்சியைச் சேர்ந்த 4 ஊர்கள் பயன்பெறுகின்றன. இந்தப் பணிக்கான ஆர்டர் காபி கேட்டால் தரவில்லை. திட்ட மதிப்பீடு, தூர் வாரும் தூரம் உள்ளிட்ட விபரம் அடங்கிய போர்டு வைக்கப் படவில்லை. மாவட்ட நிர்வாகம் இதில் உரிய கவனம் செலுத்த வேண்டும் என்றனர்.
