கழிவுநீர் கால்வாய் கட்டுமான பணிகள் - எம்.எல்.ஏ ஆய்வு
எம்.எல்.ஏ ஈஸ்வரன் ஆய்வு
திருச்செங்கோடு பகுதியில் நடைபெற்ற கழிவு நீர் கால்வாய் கட்டுமான பணிகளை சட்டமன்ற உறுப்பினர் ஈஸ்வரன் ஆய்வு செய்தார்.
நாமக்கல் மாவட்டம்,திருச்செங்கோடு அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியின் பின்புறம் உள்ள மைதானம் அருகில் நடைபெற்று முடிந்த கழிவு நீர் கால்வாய் கட்டுமான பணிகளை திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினர் ஈஸ்வரன் ஆய்வு செய்தார். கழிவுநீர் கால்வாயின் அமைப்பு மற்றும் அதன் தரத்தை ஒப்பந்ததாரரிடம் விளக்கம் கேட்டார் இந்த ஆய்வின்போது கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் மேற்கு மாவட்ட செயலாளர் நதி ராஜவேல் உடன் இருந்தார்
Next Story