சாக்கடையான ஸ்ரீபெரும்புதுார் சாலைகள்

சாக்கடையான ஸ்ரீபெரும்புதுார் சாலைகள்

சாலையில் ஓடும் கழிவுநீர்

ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சிக்கு உட்பட்ட 4 - வார்டு ரெட்டி தெருவில் மழை நீருடன் கழிவுநீர் கலந்துள்ளதால் பொதுமக்கள் அவதிக்குள்ளகினர்.

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதுார் பேரூராட்சிக்குட்பட்ட, 4வது வார்டு, ரெட்டி தெருவில் 150க்கும் அதிகமான வீடுகள் உள்ளன. அதேபோல இங்கு, அய்யப்பன் கோவில் உள்ளது. கோவிலுக்கு நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.

தவிர, இப்பகுதியினர் அய்யப்பன் கோவில் சாலை வழியாக, ஸ்ரீபெரும்புதுார் பேருந்து நிலையம், வங்கி, வணிக கடைகளுக்கு சென்று வருகின்றனர். இந்த நிலையில், நேற்று இரவு பெய்த மழையினால், கழிவுநீருடன் மழைநீர் கலந்து சாலையில் தேங்கியுள்ளது.

இதனால், இந்த சாலை வழியாக செல்லும் மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருன்றனர். சாலையில் தேங்கிஉள்ள கழிவுநீரில் செல்லும் வாகன ஓட்டிகள் வழுக்கி விழுந்து, எழுந்து சென்று வருகின்றனர். பெண்கள், குழந்தைகள், பள்ளி கல்லுாரிக்கு செல்லும் மாணவ - மாணவியர் கழிவுநீரில் நடந்து சென்று வருகின்றனர்.

மேலும், கோவிலுக்கு வரும் பக்தர்களும், மூக்கை மூடியபடி கழிவுநீரில் நடந்து கோவிலுக்கு செல்லும் அவல நிலை உள்ளது. இதனால், இங்கு கடும் துர்நாற்றம் வீசுவதுடன், நோய்த்தொற்று பரவும் அச்சத்தில் அப்பகுதி மக்கள் மற்றும் பக்தர்கள் உள்ளனர்.

Tags

Next Story