பாதாள சாக்கடை : மீண்டும் மீண்டும் உடைக்கப்படும் சாலைகள் - சிபிஎம் புகார்

பாதாள சாக்கடை : மீண்டும் மீண்டும் உடைக்கப்படும் சாலைகள் - சிபிஎம் புகார்

உடைக்கப்பட்ட சாலை 

பாதாள சாக்கடை திட்ட பணிகளுக்காக புதிய சாலைகள் போட்ட இடத்திலும் சாலைகள் மீண்டும், மீண்டும் உடைக்கப்படுவதால் மக்களின் வரிப்பணம் வீணாவதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி புகார் தெரிவித்துள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகராட்சிக்குட்பட்ட மாநகர் பகுதிகளில் கடந்த சுமார் 12 ஆண்டுகளாக பாதாள சாக்கடை பணிகள் நடைபெற்று வருகிறது. இதற்காக நகரில் உள்ள பிரதான சாலைகளில் பணிகள் நடைபெறுவதால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டு வருகிறது. இதற்கிடையில் பாதாள சாக்கடை திட்ட பணிகளுக்காக புதிய சாலைகள் போட்ட இடத்திலும் சாலைகள் மீண்டும், மீண்டும் தோண்டப்பட்டு மூடப்பட்டு மக்களின் வரிப்பணத்தை நாகர்கோவில் மாநகராட்சி நிர்வாகம் வீணடித்து வருகிறது. இந்த செயலால் ஒப்பந்தக்காரர்களுக்கு இரட்டிப்பு வருமானத்தை மாநகராட்சி நிர்வாகம் ஏற்படுத்தி கொடுப்பதாகவும் குற்றம் சாட்டி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நாகர்கோவில் மாநகராட்சி ஆணையரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.

Tags

Read MoreRead Less
Next Story