100 பெண்களுக்கு தையல் இயந்திரங்கள் : அமைச்சர் கீதாஜீவன் வழங்கினார்

100 பெண்களுக்கு தையல் இயந்திரங்கள் :  அமைச்சர் கீதாஜீவன் வழங்கினார்

தையல் இயந்திரங்களை அமைச்சர் கீதாஜீவன் வழங்கினார்

முதல்வர் ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு 100 பெண்களுக்கு தையல் இயந்திரங்களை அமைச்சர் கீதாஜீவன் வழங்கினார். 
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு இன்று தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட எட்டயபுரத்தில் நடைபெற்ற விழாவில் 100 பெண்களுக்கு தையல் இயந்திரங்களை சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் திமுக வடக்கு மாவட்ட செயலாளர் கீதாஜீவன் வழங்கினார். விழாவில், சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன், ஒன்றிய செயலாளர்கள் ராதாகிருஷ்ணன், நவநீதக்கண்ணன், சின்ன மாரிமுத்து, செல்வராஜ், மும்மூர்த்தி, ராமசுப்பு, பேரூர் செயலாளர்கள் பாரதி கணேசன், வேலுச்சாமி, பேரூராட்சி மன்ற தலைவர் ராமலட்சுமி சங்கரநாராயணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story