சிறார் வதை : 65 வயது முதியவர் மீது போக்ஸோவில் வழக்கு

சிறார் வதை : 65 வயது முதியவர் மீது போக்ஸோவில் வழக்கு

பைல் படம் 

சேலம் அருகே 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த 65 வயது முதியவர் மீது போக்ஸோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்த போலீசார் தலைமறைவாக உள்ள அவரை தேடி வருகின்றனர்.
சேலம் அருகே வீராணம் பகுதியை சேர்ந்தவர் பெருமாள் (வயது 65). இவர் 6 வயது சிறுமியிடம் சில்மிஷம் செய்துள்ளார். இதுகுறித்து தெரியவந்ததும் அந்த சிறுமியின் தாய் அம்மாப்பேட்டை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி பெருமாள் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை வலைவீசி தேடி வருகின்றனர்.

Tags

Next Story