சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை; இளைஞருக்கு 25 ஆண்டுகள் சிறை

சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை; இளைஞருக்கு 25 ஆண்டுகள் சிறை

சிறுமியைக் காதலித்துபாலியல் வன்கொடுமை செய்த இளைஞருக்கு, தஞ்சாவூர் நீதிமன்றம் 25 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது.

சிறுமியைக் காதலித்துபாலியல் வன்கொடுமை செய்த இளைஞருக்கு, தஞ்சாவூர் நீதிமன்றம் 25 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது.

சிறுமியைக் காதலித்து பாலியல் வல்லுறவு செய்த இளைஞருக்கு, தஞ்சாவூர் நீதிமன்றம் வியாழக்கிழமை 25 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது.

தஞ்சாவூர் அருகே மாதாகோட்டையைச் சேர்ந்தவர் செந்தில்குமார் மகன் கார்த்தி (21). இவர் 2021 ஆம் ஆண்டில் பிளஸ் 2 படித்து வந்த 17 வயது பெண்ணைக் காதலித்து வந்தார். இச்சிறுமியைத் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைக் கூறி கார்த்தி பாலியல் வல்லுறவு செய்தார். இதன் பின்னர், இருவரும் இரு வாகனத்தில் சென்றபோது, காவல் துறையினர் மேற்கொண்ட வாகனத் தணிக்கையில் சிக்கிக் கொண்டனர்.

இதில், காவல் துறையினர் நடத்திய விசாரணையில் சிறுமி கார்த்தி பாலியல் வல்லுறவு செய்தது தெரிய வந்தது. இது குறித்து வல்லம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தினர் 2021, ஆகஸ்ட் 29 ஆம் தேதி வழக்குப் பதிந்து கார்த்தியை கைது செய்தனர். இது தொடர்பாக தஞ்சாவூர் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டது. இந்த வழக்கை நீதிபதி ஜி.சுந்தரராஜன் விசாரித்து கார்த்திக்கு 25 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.60 ஆயிரம் அபராதமும் விதித்து வியாழக்கிழமை தீர்ப்பளித்தார்.

Tags

Next Story