சிறுவனுக்கு பாலியல் தொல்லை - 20ஆண்டு சிறை
பாலியல் தொஎல்லை கொடுத்தவர்
சிவகங்கை மாவட்டம், இளையான்குடி புதூர் பகுதியை சேர்ந்தவர் இனூஸ் மகன் ஜகாங்கீர். இவர் சென்னையில் உள்ள தங்கும் விடுதியில் ரூம் பாயாக பணிபுரிந்து வந்துள்ளார். கடந்த 2017 ஆம் ஆண்டு தனது சொந்த ஊருக்கு வந்திருந்த நிலையில் வீட்டின் அருகே உள்ள 5 வயது சிறுவனுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார்.
இதுகுறித்து இளையான்குடி காவல் நிலையத்தில் வழக்குபதிவு செய்யப்பட்டு, இந்த வழக்கானது சிவகங்கை போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் குற்றம் உறுதிசெய்யப்படவே அவருக்கு 20 ஆண்டு சிறை தண்டனையும், ரூபாய் 8 ஆயிரம் அபராதம் விதித்தும் போக்சோ சிறப்பு நீதிமன்ற நீதிபதி சரத்ராஜ் உத்தரவிட்டுள்ளார். மேலும் பாதிக்கப்பட்ட சிறுவனுக்கு தமிழக அரசு ரூபாய் 5 லட்சம் நிவாரணம் வழங்கவும் உத்தரவிட்டார்.
சிறுவனுக்கு பாலியல் தொல்லை அளித்தவருக்கு 20 ஆண்டு சிறை தண்டனை விதித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது