பெண்ணுக்கு பாலியல் தொல்லை - சிறுவன் தந்தை மீது வழக்கு
காவல் நிலையம்
திருக்கோவிலுார் அருகே பெண்ணுக்கு பாலியல் தொல்லை அளித்த சிறுவன் தந்தை மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.
விழுப்புரம் மாவட்டம், திருக்கோவிலுார் அடுத்த ஒரு கிராமத்தை சேர்ந்தவர் 24 வயது பெண்திருமணமானவர். இவர் குளிக்கும்போது அதே பகுதியைச் சேர்ந்த 15 வயது பிளஸ் 1 படிக்கும் மாணவர் மொபைல் போனில் வீடியோ எடுத்துள்ளார். வீடியோவை அந்த பெண்ணிடம் காண்பித்து, தனது ஆசைக்கு இணங்கவில்லை என்றால் வீடியோவை வாட்ஸ் ஆப்பில் பகிர்வேன் என மிரட்டி கடிதம் கொடுத்துள்ளார். இதுகுறித்து அந்த பெண் ஊர் முக்கியஸ்தர்களிடம் கூறியதை தொடர்ந்து, சிறுவனை கண்டித்துள்ளனர். இதில், ஆத்திரமடைந்த சிறுவனின் 36 வயது தந்தை, அந்த பெண்ணை பழிவாங்க வேண்டும் என்பதற்காக மகன் எழுதிய அந்த கடிதத்தை கிராமத்தினர் ஒருங்கிணைத்த 'வாட்ஸ் ஆப்' குழுவில் பதிவிட்டுள்ளார். இதுகுறித்த புகாரின் பேரில் திருக்கோவிலுார் அனைத்து மகளிர் போலீ சார், வழக்குப் பதிந்து, சிறுவனின் தந்தையை கைது செய்தனர்.
Next Story