சிறுமிக்கு பாலியல் தொல்லை - தொழிலாளிக்கு 7 ஆண்டு சிறை
சேலம் நீதிமன்றம்
வாழப்பாடி அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில் கூலித்தொழிலாளிக்கு 7 ஆண்டு சிறை தண்டனை விதித்து சேலம் போக்சோ கோர்ட் உத்தரவிட்டது.
சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே உள்ள சி.என்.பாளையத்தை அடுத்த அப்புக்குட்டி பகுதியை சேர்ந்தவர் பழனி. இவருடைய மகன் ஜெகதீசன் (வயது 48). கூலி தொழிலாளி. இவர் கடந்த 2023-ம் ஆண்டு மே மாதம் 19-ந்தேதி மிட்டாய் வாங்கித்தருவதாக கூறி 3 வயது சிறுமியை வீட்டிற்கு தூக்கிச்சென்றார். பின்னர் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்து உள்ளார். இது குறித்து தகவல் அறிந்த சிறுமியின் பெற்றோர் வாழப்பாடி அனைத்து மகளிர் போலீசில் புகார் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜெகதீசனை கைது செய்து சேலம் மத்திய சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு சேலம் போக்சோ கோர்ட்டில் நடந்து வந்தது. வழக்கு விசாரணை முடிவடைந்து நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. அதன்படி சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த கூலி தொழிலாளி ஜெகதீசனுக்கு 7 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.2 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி ஜெயந்தி உத்தரவிட்டார்.
Next Story