பாலியல் வன்கொடுமை; இருவர் மீது பாய்ந்தது குண்டர் தடுப்பு சட்டம்

பாலியல் வன்கொடுமை; இருவர் மீது பாய்ந்தது குண்டர் தடுப்பு சட்டம்

அரியலூரில் பாலியல் குற்ற வழக்குகளில் ஈடுபட்ட இருவருக்கு, குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

அரியலூரில் பாலியல் குற்ற வழக்குகளில் ஈடுபட்ட இருவருக்கு, குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

அரியலூர் மாவட்டம் பாப்பாக்குடி கிராமத்தை சேர்ந்தவர் பாலகுமார். இவர் அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த 12 ஆம் வகுப்பு படிக்கும் சிறுமியை காதலிப்பதாகவும், பின்னர் திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனையடுத்து ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் கடந்த 28.11.2023 அன்று வழக்குபதிவு செய்து பாலகுமாரை சிறையில் அடைத்தனர்.

இதேபோல் குருவாலப்பர் கோவில் பகுதியை சேர்ந்த விஜய் என்பவர் மாற்று திறனாளி பெண் ஒருவரை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனையடுத்து விஜய் என்பவரும் கைது செய்யபட்டு கடந்த 26.11.2023 அன்று சிறையில் அடைக்கபட்டார். இந்நிலையில் இரண்டு பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்க மாவட்ட எஸ்பி பெரோஸ்கான் அப்துல்லா மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்தார். இதனையடுத்து மாவட்ட ஆட்சியர் ஆனிமேரி ஸ்வர்ணா இன்று குற்றவாளிகள் 2 பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். இதனையடுத்து 2 பேரும் திருச்சி மத்திய சிறையில் அடைக்க கொண்டு செல்லபட்டனர்.

Tags

Next Story