செய்யாறு மாவட்டம்: வணிகர் சங்கம் தீர்மானம்
வணிகர் சங்க ஆலோசனை கூட்டம்
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு நகர அனைத்து வணிகர்களின் சங்கபுதிய நிர்வாகிகள் பதிவு ஏற்பு விழா நிகழ்ச்சி கோபால் தெருவில் உள்ள திருமண மண்டபத்தில் நடந்தது நிகழ்ச்சிக்கு சங்கத் தலைவர் வி.தெய்வசிகாமணி தலைமை தாங்கினார். செயலாளர் டி.லியாகத்தலி வரவேற்றார்.
சாசனத் தலைவர் ஆ.மோகனவேல், தொழில்அதிபர் பி.நல்லசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். பொருளாளர் கி.கோபிராஜ் நிதிநிலை அறிக்கை வாசித்தார். சிறப்பு விருந்தினராக பன்னாட்டு தன்னார்வ தொண்டு நிறுவன சமூக ஆர்வலர் ஆர். சரவணன் சிறப்புரையாற்றினார்.
புதிய நிர்வாகிகளாக தலைவராக எஸ்.சண்முகம், செயலாளர் டி.எம்.அக்கீம்பாட்ஷா, பொருளாளராக டி.தேவன், மாவட்ட நிர்வாகிகளாக தெய்வசிகாமணி, கோபிராஜ், ஆர்.தில்லை, தகவல் தொடர்பாளராக திருமலை கண்ணன், சட்ட ஆலோசகராக அசோக் மற்றும் கௌரவ தலைவர்கள், துணைத் தலைவர்கள், இணை செயலாளர்கள், துணைச் செயலாளர்கள், சங்க ஒருங்கிணைப்பாளர்கள், சங்க இயக்குனர்கள் உள்ளிட்ட நிர்வாகிகள் பலரும் பொறுப்பேற்றுக் கொண்டனர்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் பின்வருமாறு, தமிழகத்தில் பெரிய மாவட்டமாக உள்ள திருவண்ணாமலை மாவட்டத்தை நிர்வாக வசதிக்காக இரண்டாகப் பிரித்து செய்யாறை தலைமையிடமாகக் கொண்டு புதிய வருவாய் மாவட்டம் அறிவிக்க தமிழக அரசை வலியுறுத்துவது, செய்யாறு வணிகர் நல அறக்கட்டளை புதிதாக உருவாக்குதல்,
செய்யாறு வணிகர் நல அறக்கட்டளையுடன் இணைந்து சொந்த இடம் மற்றும் கட்டிடம் உருவாக்குதல், வணிகர்களின் பாதுகாப்பிற்கு தனிச்சட்டம் கொண்டுவர வேண்டுமென தமிழக அரசை வலியுறத்துவது.செய்யாறு மார்க்கெட் பகுதி வணிக வளாத்தில் ஏற்கனவே இருந்து வணிகம் செய்த வணிகர்களுக்கு முன்னுரிமை அளித்திட நகராட்சி நிர்வாகத்திடம் வலியுறுத்துவது உள்ளிட்ட 14 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.