செய்யாறு புதிய மாவட்டம்?: அறிவிப்பு வருமா?

செய்யாறு புதிய மாவட்டம்?: அறிவிப்பு வருமா?

செய்யாறு

செய்யாறை புதிய மாவட்டமாக பிரிக்க தமிழகத்தில் வரும் சட்ட மன்ற கூட்டத்தொடரில் அறிவிப்பு வெளியாகுமா என எதிர்பார்த்துள்ளனர்.

தமிழ்நாட்டில் புதிதாக செய்யாறு மாவட்டம் உட்பட 7 மாவட்டங்கள் உருவாக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. வருகிற சட்டமன்ற கூட்டத் தொடரில் இதற்கான அறிவிப்பு வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

நவம்பர் 1956 அன்று மாநிலம் உருவாக்கப்பட்டபோது 13 மாவட்டங்கள் இருந்தன. அதன்பிறகு தற்போது தமிழ்நாடு 38 மாவட்டங்களைக் கொண்டுள்ளது. சுதந்திரத்தின் போது, இந்தியாவில் மெட்ராஸ் பிரசிடென்சி 26 மாவட்டங்களைக் கொண்டதாக இருந்தது, அதில் 10 மாவட்டங்கள் இன்றைய தமிழ்நாட்டில் இப்போதும் மாவட்டங்களாக உள்ளன, அதாவது செங்கல்பட்டு, கோயம்புத்தூர், நீலகிரி, சென்னை, மதுரை, ராமநாதபுரம், சேலம், தஞ்சை, திருநெல்வேலி, திருச்சி ஆகியவை இப்போதும் மாவட்டங்களாக உள்ளன. இந்த நிலையில்தான் தமிழ்நாட்டில் புதிதாக 7 மாவட்டங்கள் உருவாக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகிறது. புதிய மாவட்டங்கள் உதயமாவது தொடர்பாக தமிழ்நாடு அரசு ஆலோசனைகளை மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது. தமிழ்நாட்டில் புதிதாக 7 மாவட்டங்கள் உதயமாவது தொடர்பாக விரைவில் அறிவிப்புகள் வெளியாகும் மாவட்டங்கள் பின்வருமாறு கும்பகோணம், பொள்ளாச்சி, கோவில்பட்டி, பழனி, செய்யாறு, விருத்தாச்சலம், கோபிச்செட்டிபாளையம் ஆகிய மாவட்டங்கள் புதியதாக உதயமாகவுள்ளதாக தெரிகிறது. இதற்கான அறிவிப்பை தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிக்கவுள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது. இதற்கு முன் 2 அக்டோபர் 1966-ல் தர்மபுரி மாவட்டம், 14 ஜனவரி 1974-ல் புதுக்கோட்டை மாவட்டம் உருவாக்கப்பட்டது. 31 ஆகஸ்ட் 1979-ல் ஈரோடு மாவட்டம், 8 மார்ச் 1985-ல் சிவகங்கை மற்றும் விருதுநகர் மாவட்டங்கள், 15 செப்டம்பர் 1985-ல் திண்டுக்கல் மாவட்டம், 20 அக்டோபர் 1986-ல் தூத்துக்குடி மாவட்டம், 30 நவம்பர் 2019-ல் செங்கல்பட்டு மாவட்டம், 24 மார்ச் 2020-ல் மயிலாடுதுறை மாவட்டம், அதனைத் தொடர்ந்து தற்போது திருவண்ணாமலை மாவட்டத்தில் இருந்து செய்யாறு, வந்தவாசி, வெம்பாக்கம் மற்றும் சேத்துப்பட்டு ஆகிய தாலுகா உள்ளடக்கி புதியதாக செய்யாறு மாவட்டம் உருவாக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

Tags

Next Story