ராசிபுரத்தில் இந்திய மாணவர் சங்கக்கூட்டம்

ராசிபுரத்தில் இந்திய மாணவர் சங்கக்கூட்டம்

இந்திய மாணவர் சங்கக் கிளைக் கூட்டம் 

திருவள்ளுவர் அரசு கலைக் கல்லூரியின் இந்திய மாணவர் சங்கக் கிளைக் கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

திருவள்ளுவர் அரசு கலைக் கல்லூரியின் இந்திய மாணவர் சங்கக் கிளைக் கூட்டம் ஆண்டகலூர்கேட் பகுதியில் புதன்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்தில் கிளை ஒருங்கிணைப்பாளர் ராஜசூரியா தலைமை வகித்தார். இக்கூட்டத்தில் கல்விக்கான பிரச்சனைகளை முன்னிறுத்தி நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும், புதிய கல்வி கொள்கையை திரும்ப பெற வேண்டும், கல்வியை பாதுகாப்போம், இந்தியாவை பாதுகாப்போம், புதிய கல்வி கொள்கையை நிரகரிப்போம், பாஜக நிராகரிப்போம் எனும் தலைப்பில் ஜன.12 -ல் 16 மாணவர்கள் கூட்டமைப்புகள் சார்பில் நாடாளுமன்றம் நோக்கி செல்லும் பேரணியில் பங்கேற்பது. பிப்.1-ல் ஆளுநர் மாளிகை நோக்கி செல்லும் மாணவர் கூட்டமைப்பு சார்பாக நடக்கும் பேரணியில் பங்கேற்பது குறித்தும் பேசப்பட்டது.

சுதந்திரப் போராட்ட வீரர் என்.சங்கரய்யா போராட்ட வரலாற்றினை தமிழக அரசு, அரசு பாடத்திட்டங்களில் சேர்க்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இது தொடர்பாக வருகின்ற ஜன.23ஆம் தேதி ராசிபுரம் தபால் நிலையத்தில் தமிழக முதலமைச்சர், தமிழக பள்ளி கல்வி துறை அமைச்சர், பள்ளி கல்வித்துறை செயலாளர், தமிழ்நாடு பாடநூல் கழகம் ஆகியோருக்கு கோரிக்கை மனு அனுப்பும் இயக்கம் நடத்துவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. இக்கூட்டத்தில் மாணவர் சங்க மாவட்ட செயலாளர் தே.சரவணன் , மாவட்ட தலைவர் மு.தங்கராஜ் , மாவட்ட செயற்குழு உறுப்பினர் நிசார், கிளை நிர்வாகி யாழினி ,கிருபா உள்ளிட்டர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story