ஆத்தூர் : சக்தி அழைத்தல் தீர்த்த குடம் ஊர்வலம்

ஆத்தூர் : சக்தி அழைத்தல் தீர்த்த குடம் ஊர்வலம்
X

சக்தி அழைத்தல் நிகழ்ச்சி

சேலம் மாவட்டம், ஆத்தூர் கிராமத்தில் உள்ள கோவில்களில் சக்தி அழைத்தல் தீர்த்தக்குட ஊர்வலம் நிகழ்ச்சி நடைபெற்றது.

சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே ராமநாயக்கன்பாளையம் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ பாண்டூர் பெரியசாமி ஸ்ரீ ஊர் சுத்தியான் ஸ்ரீ காசி முனி திருக்கோவிலில் திருவிழா முன்னிட்டு கடந்த ஒன்றாம் தேதி விளக்கு பூஜை காப்பு கட்டுதல் உள்ளிட்ட நிகழ்ச்சியுடன் தொடங்கி நடைபெற்ற நிலையில் இன்று மாலை சுவாமி கண் திறப்பு வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு மகாதீபாரனை நடைபெற்று முடிந்த நிலையில் சக்தி அழைத்தல் நிகழ்ச்சிக்காக சுவாமி ஊர்வலம் நடைபெற்றது.

இதில் அருள்மிகு ஸ்ரீ பாண்டூர் பெரியசாமி, ஸ்ரீ ஊர் சுத்தியான் ஸ்ரீ காசி முனி சுவாமிகளின் வேடம அணிந்து முக்கிய வீதிகள் வழியாக மேலதாளம் முழங்க தீர்த்த கலசத்துடன் ஊர்வலம் நடைபெற்றது.இந்நிகழ்ச்சியில் ராமநாயக்கன்பாளையம் சுற்றுவட்டார பகுதியில் இருந்து 100க்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.

Tags

Next Story