சக்தி மாரியம்மன் லட்சுமி அவதாரத்தில் அருள்பாளிப்பு

சக்தி மாரியம்மன் லட்சுமி அவதாரத்தில் அருள்பாளிப்பு

லட்சுமி அலங்காரம்

சங்ககிரி சக்தி மாரியம்மன் கோவில் பொங்கல் விழா 9 வது நாளாக லட்சுமி அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

சேலம் மாவட்டம், சங்ககிரி வி.என். பாளையம் பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு சக்தி மாரியம்மன் கோவில் பொங்கல் விழாவை முன்னிட்டு 9 வது நாளாக அம்மனுக்கு பல்வேறு சிறப்பு அபிஷேக பூஜைகள் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து சக்தி மாரியம்மனுக்கு லட்சுமி அவதாரத்தில் அலங்கரித்து சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை வழிபாடு செய்தனர்.

Tags

Next Story